மெகா பட்ஜெட்டுடன் .. தேனி வேட்பாளராகிறார் ஓபிஎஸ் மகன்..

398

தேனி லோக்சபா தொகுதியின் ஆளுங்கட்சி வேட்பாளராக, ஓபிஎஸ் மகன்  ரவீந்திரநாத்தை அறிவிக்க எடப்பாடி ஓகே சொல்லி விட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாரிசு அரசியல் என்கிற அஸ்திரத்தை எடப்பாடி வீசுவார் என்று எதிர்பார்த்த ஓபிஎஸ் தரப்பினர் ரொம்ப குஷியில் உள்ளனர். காரணம் இதனை எதிர்பார்த்து கடந்த சில வாரங்களாக தேர்தல் பணிக்குழு விஐபிக்கள் என ரவீந்திரநாத் தரப்பு ரகசியமான பணிகளை மேற்கொண்டு வந்ததுதான். குறிப்பாக தனது தந்தையையும் தன்னையும் அசிங்கப்படுத்திய டிடிவியை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக மெகா பட்ஜெட் ஒன்றையும் ஓபிஎஸ் தரப்பு தயார் செய்து இருப்பதாகவும் அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.

ஓட்டளிக்க வைப்பது வரை, கண்காணிக்க வேண்டும். அதிமுக, ஓட்டுகள், அன்பளிப்பு வழங்கினால் மாறி ஓட்டளிப்பவர்கள். திமுக  ஆட்கள் என பல்வேறு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வாரம் ஒரு பரிசு என்கிற ரீதியில் வாக்காளர்களை அசத்த அண்ணன்  பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறார் என்கிறனர் ஓபிஎஸ் தரப்பு ஆட்கள். பட்ஜெட் எப்படியும் 100ஐ தாண்டும் என்பதும் அவர்களின் கணிப்பு. 

LEAVE A REPLY