தொடருமா வெற்றி?

0
58

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் விளையாடுகிறது. இதில், ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றி இதுவேயாகும். 

இந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நாளை அக்.12 முதல் 16 வரை நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான 12 வீரர்கள் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி (கே) லோகேஷ் ராகுல், ப்ரித்வி ஷா,  புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட் (வி.கீ),  அஷ்வின்,  ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாகுர் இடம் பெற்றுள்ளனர். மயாங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெறவில்லை. இவர்கள் தற்போது விஜய் ஹசாரே டிராபி நடைபெறுவதால் விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட விரும்பினால் ஷர்துல் தாகூர் அணியில் இடம் பெறுவார். இல்லையென்றால் முதல் டெஸ்டில் விளையாடிய அதே அணிதான் களமிறங்கும்.

LEAVE A REPLY