Car driving fast speed at night, view from inside a car

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் முதல் முறை குற்றத்திற்கு ரூ.400 அபராதமும் 2வது முறை குற்றத்திற்கு ரூ.1000 அபராதமும், மேலும் இவ்வாகனத்தின் உரிமையாளருக்கு வேகமாக ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக ரூ.300, மறுமுறை அதே குற்றம் இழைக்கப்பட்டால் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.

அதேபோல அச்சுறுத்தும் வகையில் வேகமாக வாகனம் இயக்கினால் முதல் முறை குற்றத்திற்கு ரூ.1000 அல்லது 6 மாத கால சிறை தண்டனை விதிக்கப்படும்.  இவ்வகை குற்றங்களுக்கு முதலில் குற்றம் செய்த நாளிலிருந்து 3 ஆண்டுக்குள் அதே குற்றத்தை 2வது முறை மற்றும் அதற்கடுத்த முறைகளில் செய்தால், 2 ஆண்டுகள் சிறைதண்டனை அல்லது ரூ.2000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

ஒப்பந்த ஊர்திகள் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக ஆட்களை ஏற்றிச் சென்றால் நபருக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்படும். மேலும் பேருந்துகளில் அதிக ஆட்களை ஏற்றிச் சென்றால் அனுமதிச் சீட்டுக்கு தற்காலிக தடை, அதிக பட்சம் 30 நாட்கள் அல்லது ரூ.9000 வரை இணக்க கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ஓட்டுநர் உரிமம் 3  மாதங்களுக்கு குறையாமல் தற்காலிக தகுதியிழப்பும் செய்யப்படும். இது குறித்து பொதுமக்கள் 1800 425 5430 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Warning: A non-numeric value encountered in /cloudsin/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY