டாஸ்மாக் வேண்டாம்… காந்தி மனு

0
57

கோர்ட்டை அவமதிக்கும் வகையில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளதாக ஆர்டிஓவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள அணைக்கரை ஒழுகச்சேரியை சேர்ந்த காந்தி என்பவர் கும்பகோணம் ஆர்டிஓவிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் மதுகடை திறக்கும் செய்தி அறிந்து எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் முடிவெடுத்து மது கடையை திறக்க கூடாது என வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தினோம். அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக மதுக்கடை திறக்கும் முடிவை கைவிடுவதாக உறுதிமொழி அளித்தனர். இந்நிலையில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார்.  அந்த வழக்கில் கலெக்டர் விசாரித்து முடிவெடுக்க வழிகாட்டுதல் வழங்கி வழக்கை முடித்து வைத்தது. இந்நிலையில் கணேசன்  மனு பரிசீலனை செய்யாமலேயே திடீரென நேற்று இரவு 7 மணிக்கு மேல் டாஸ்மாக் பான கடையை அதிகாரிகள் திறந்தனர். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். மேலும்,காசி மடத்திற்கு சொந்தமான இடத்தை 99 வருடம் குத்தகைதாரராக பெற்று அதன்பேரில் வழங்கப்பட்ட மற்றும் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மடத்தின் விதிகளுக்கு புறம்பாக அரசு, மடம் சார்ந்த நிலங்கள் மற்றும் சொத்துக்களுக்கு வழிகாட்டி வகுத்துள்ள நெறிமுறைகளை மீறி கட்டடம் கட்டி மடத்தினுடைய ஆகம மற்றும் நடைமுறை விதிமுறைகளுக்கு புறம்பாக டாஸ்மாக் மதுபான கடை திறப்பது என்பது சட்ட விரோதமாகும். இந்த கடையை உடனடியாக நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY