திருச்சியில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை
மலேசியா செல்வதற்காக ஏர் ஏசியா விமானம் தயாராக இருந்தது. இதில் பயணம் செய்ய வந்த பயணிகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் ரூ.9.78 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்து கடத்த முயன்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

LEAVE A REPLY