திருச்சி விமான நிலையத்திற்கு இன்று கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம், வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அகமதாபாத்தைச் சேர்ந்த நூர் ஷா குல் முகம்மத் என்பவர் 599 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு 19.30 லட்சம் ரூபாய். 

இதேபோல மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது மலேசியாவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் மறைத்து எடுத்து வந்த 226 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 7 லட்சம். இதையடுத்து கடத்தி வந்த இருவரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY