திருச்சியில் புதிய பஸ்கள் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டு பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். திடீரென ஒரு நிருபர் இந்திய அளவில் தமிழக சுற்றுலாத்துறை சிறப்பான இடம் பிடித்திருக்கிறது. ஆனால் அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க திட்டங்கள் இல்லையே ? பல மாவட்டங்களில் ஏன்  திருச்சியில் கூட அதிகாரி இல்லையே?  என்று கேட்க, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் காலியாக இருந்த இடங்களில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விட்டதாக  கூறினார். திருச்சி மாவட்ட சுற்றுலா அலுவலர் இடம் காலியாகவே உள்ளது. தற்போது நாமக்கல்  அதிகாரிதான் திருச்சிக்கு பொறுப்பு வகிக்கிறார். அவர் வாரத்திற்கு 2 நாட்கள் தான் வருகிறார். இது கூட அமைச்சருக்கு தெரியலையே என்கின்றனர் திருச்சி பிரஸ்காரர்கள். 

LEAVE A REPLY