கொடநாடு விவகாரத்தை கிளப்பியது டிடிவி தரப்புதான்.. லேட்டான உளவுத்துறை

266

கொடநாடு கொள்ளை கொலை தொடர்பாக தெகல்ஹா வெளியிட்டுள்ள ஆவண படம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப் பெரிய சிக்கலை உண்டாக்கி இருக்கிறது. இப்படி ஒரு சிக்கலை எடப்பாடி எதிர்பார்க்கவில்லை. இந்த விவகாரத்திற்கு காரணம் திமுகதான் என அதிமுக நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில் மேத்யூ சாமுவேல் மூலமாக தகவல்களை  கசியவிட்டது தினகரன் தரப்பு தான் என்பதை லேட்டாக உறுதிபடுத்தியிருக்கிறது உளவுத்துறை.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் நடைபெற்று வரும் விசாரணையில் நம்பகத்தன்மை இல்லை என்று ஒரு புகாரை டிஜிபியிடம் கடந்த ஆண்டிலேயே கொடுத்தவர் தினகரனின் தீவிர ஆதரவாளரான வெற்றிவேல். அத்துடன் சில ஆதாரங்களையும் கொடுத்திருந்தார். கொடநாடு கொலையும், கொள்ளையும் நடந்த முதல்நாள் இரவு கோவையில் இருந்து சிலர் கோத்தகிரிக்கு வந்ததையும், அங்கே ரூம் போட்டு தங்கியதையும், இரவு ஹோட்டலில் இருந்து கிளம்பிப் போனதையும், அவர்களை கொடநாட்டில் பார்த்த ஆதாரங்களையும் அப்போதோ டிஜிபியிடம் கொடுத்தவர் வெற்றிவேல்.  ஆனால், டிஜிபி அதை விசாரிக்கவோ, பெரிதாக எடுத்துக் கொள்ளவோ இல்லை. அதற்கு காரணம், வெற்றிவேல் சொன்ன புகாரில், கொலையாளிகளுக்கு ரூம் போட்டுக் கொடுத்தது, கோவையில் இருந்து அவர்களை அனுப்பி வைத்தது என எல்லாமே அமைச்சர் என்பதால்தான் என்கின்றனர் டிடிவி தரப்பினர். 

வெற்றிவேலின் புகார் தான் தற்போது வேறு விதமாக தெகல்ஹா மூலமாக பூகம்பத்தை கிளப்பியிருக்கிறது என்பதை தற்போதுதான்  உளவுத்துறை கண்டுபிடித்திருக்கிறது. அமைச்சர் ஜெயக்குமாருக்கும் சென்னையைச் சேர்ந்த  சிந்து என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது குறித்தும், அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக டிடிவி தரப்பு தகவல் கசிய விட்டது. அதற்கு ஆதாரமாக திண்டுக்கலில் அமைச்சர் தங்கியிருந்த அறை எண் மற்றும் சிந்து மற்றும் அவரது தாய் ஆகியோர் தங்கியிருந்த ஓட்டல் ரூம் போன்ற ஆதாரங்கள் தங்களிடம்  இருப்பதாக வெற்றிவேல் பேட்டி கொடுத்தார். அதேபாணியில் குற்றவாளிகள் கோவையில் தங்கியிருந்த ஓட்டல் மற்றும் அறை எண் ஆகியவற்றை வெற்றிவேல் ஏற்கனவே  வைத்திருந்த நிலையில் அவற்றை தற்போது தெகல்ஹா மூலம் டிடிவி தரப்பு வெளியிட்டிருப்பதாக  உளவுத்துறை  கண்டுபிடித்திருக்கிறது. 

LEAVE A REPLY