மீண்டு(ம்) வருகிறார் வடிவேலு!

190
இம்சை அரசன் 24 ம் புலிகேசி 2 ஆம் பாகம் பட பிரச்னையிலிருருந்து முழுமையாக வெளியே வந்திருக்கிறார் நடிகர் வடிவேலு. இது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தைகள், சமரசங்கள், கருத்து வேறுபாடுகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். வடிவேலு நடிப்பில் உருவாகும் படம் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. 
 
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி:- ’கொஞ்ச நாள் அமைதியா இருப்போம் என்று நான்தான் நடிக்காம இருந்தேன். ஆனால், இந்த சினிமா என்னை ஒருபோதும் ஒதுக்கியது இல்லை. ஒதுக்கவும் ஒதுக்காது. என்னை சார்ந்த எல்லோருக்கும் அது தெரியும்.  எனது அடுத்த படம் குறித்து செப்டம்பர் இறுதியில் அறிவிக்கப் போறேன். அந்த அறிவிப்பே ரொம்ப சுவாரசியமாக இருக்கும். அதை கேட்டாலே, ஜனங்க ஜாலியாகிடுவாங்க. வலுவான கூட்டணி, அசத்தலான கதைக் களம், மிரட்டுற பர்ஸ்ட் லுக் என்று தாரை தப்பட்டைகள் கிழிஞ்சு தொங்கற மாதிரி பிச்சு உதறப் போறோம்’ என்றார்.

LEAVE A REPLY