🖋1901 – ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் வில்லியம் மக்கின்லியைக் கொலை செய்த குற்றத்திற்காக லியோன் சொல்கோஸ் என்பவனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

🖋1922 – முசோலினி இத்தாலி பிரதம மந்திரியானார்.

🖋1929 – “கருப்பு செவ்வாய்” என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூ யோர்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆரம்பமானது.

🖋1948 – “சாஃப்சாஃப்” என்ற பாலஸ்தீனக் கிராமமொன்றில் புகுந்த இஸ்ரேலியர்கள் 70 பாலஸ்தீனர்களைச் சுட்டுக் கொன்றனர்.

🖋1950 – அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர் வரலாற்றுப் புதினம் முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்தது.

🖋1956 – இஸ்ரேலியப் படைகள் சினாய் தீபகற்பத்தைக் கைப்பற்றி எகிப்தியப் படைகளை சூயஸ் கால்வாய் நோக்கி விரட்டினர்.

🖋1969 – உலகின் முதலாவது ஒரு கணினியில் இருந்து வேறொரு கணினிக்கான தொடுப்பு ARPANET மூலம் இணைக்கப்பட்டது.

🖋1991 – நாசாவின் கலிலியோ விண்கலம் 951 காஸ்ராவுக்குக் கிட்டவாகச் சென்று சிறுகோள் ஒன்றுக்குக் கிட்டவாக சென்ற முதலாவது விண்கலம் ஆனது.

🖋1998 – டிஸ்கவரி விண்ணோடம் STS-95 என்ற விண்கப்பலுடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.

🖋1999 – ஒரிஸாவில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 10,000 பேர் வரை இறந்தனர். 2.5 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.

🖋2005 – டில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 60பேர் வரை கொல்லப்பட்டனர்.

🔵பிறப்புகள்

🖋1931 – வாலி, தமிழகக் கவிஞர் (இ. 2013)

🖋1981 – ரீமா சென், இந்திய திரைப்பட நடிகை

🖋1985 – விஜேந்தர் குமார், இந்தியக் குத்துச்சண்டை மெய்வல்லுனர்

 

LEAVE A REPLY