644 – இரண்டாவது முஸ்லிம் கலீபா உமறு இப்னு அல்-கத்தாப் மதினாவில் பாரசீக அடிமையால் கொல்லப்பட்டார்.
1493 – கரிபியன் கடலில் டொமினிக்கா தீவை முதன் முதலில் கொலம்பஸ் கண்டார்.
.
1793 – பிரான்சின் நாடகாசிரியரும், செய்தியாளரும், பெண்ணியவாதியுமான ஒலிம்பியா டி கஸ் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
1812 – நெப்போலியனின் ராணுவத்தினர் வியாஸ்மா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்றனர்.
1838 – பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.
.
1913 – ஐக்கிய அமெரிக்கா வருமான வரியை அறிமுகப்படுத்தியது.

1943 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் வில்ஹெம்ஷாஃபென் துறைமுகத்தை அமெரிக்காவின் சுமார் 500 போர் விமானங்கள் தாக்கி அழித்தன.
1957 – உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை (லைக்கா என்னும் நாயை) சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கப்பலில் விண்வெளிக்கு அனுப்பியது.
1963 – தி.மு.க. செயற்குழு திராவிட நாடு, தனிநாடு கோஷத்தைக் கைவிடுவதாக அறிவித்தது.
1963 – ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் காமராஜர்  தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1973 – நாசா மரைனர் 10 என்ற விண்கப்பலை புதன் நோக்கி அனுப்பியது. 1974, மார்ச் 29 இல் அக்கோளை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

 

 

LEAVE A REPLY