680 – முகமது நபியின் பேரன் ஷியா இமாம் உசேன் பின் அலி, காலிப் முதலாம் யாசிட்டின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஷியா முஸ்லிம்களினால் இந்நாள் ஆஷுராஹ் என அனுசரிக்கப்பட்டு வருகிறது.

1575 – பிரான்சில் ரோமன் கத்தோலிக்கப் படைகள் புரட்டஸ்டான்டர்களைத் தோற்கடித்தனர்.

1780 – கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20,000-30,000 பேர் வரை இறந்தனர்.

1868 – கியூபாவின் முதலாவது விடுதலைப் பிரதேசம் “லாடெமஹாகுவா” பகுதியில் கார்லோஸ் செஸ்பெடஸ் என்பவர் தலைமையில் அறிவிக்கப்பட்டது.

1911 – வூச்சாங் எழுச்சி ஆரம்பமாகியது. இது சிங் வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சீனக் குடியரசு உருவாவதற்கு வழிவகுத்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியரின் பிடியில் இருந்த சிங்கப்பூரில் சிங்கப்பூர் துறைமுகம் மீதான தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக 57 அப்பாவிகள் ஜப்பானியர்களினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: 800 ஜிப்சி சிறுவர்கள் அவுஸ்விச் வதைமுகாமில் படுகொலை செய்யப்பட்டனர்.

1945 – போருக்குப் பின்னரான சீனா குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் குவோமின்டாங்கும் உடன்பாட்டிற்கு வந்தனர். இது இரட்டை பத்து உடன்பாடு என அழைக்கப்படுகிறது.

1967 – விண்வெளி தொடர்பாக அறுபதுக்கும் அதிகமான நாடுகள் ஜனவரி 27 ஆம் நாள் கையெழுத்திட்ட உடன்பாடு அமல் படுத்தப்பட்டது.

1986 – 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் எல் சல்வடோரின் சான் சல்வடோர் நகரைத் தாக்கியதில் 1,500 பேர் இறந்தனர்.

1987 – விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.

1991 –  நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

பிறப்புகள்

1908 – கே. பி. சுந்தராம்பாள், தமிழிசைப் பாடகி, நாடக, திரைப்பட நடிகை (இ. 1980)

1913 – கிளோட் சைமன், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 2005)

1927 – நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, தென்னிந்திய கர்நாடக இசைப் பாடகர், (இ. 2014)

 

LEAVE A REPLY