ஸ்ரீரங்கத்தில் ஏப்ரல் மாதம் முதல் வேன், பஸ்க்கு “சீட்டு” கிடையாது

561

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கத்திற்கு வந்து செல்லும் உள்ளூர் தனியார் பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு இதுவரை நிறுத்த கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. 3 ஆண்டு குத்தகை அடிப்படையில் ஏலம் விடப்பட்டு ஏலம் எடுத்தவர்கள் கட்டணம் வசூல் செய்து வந்தனர். தற்போது கடந்த 1.42016 முதல் வரும் 31.3.2018 வரை ஏலம் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வசூலை கைவிடுவதாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.

இதன்படி வரும்1.4.2019 முதல் இது அமலுக்கு வருகிறது. எனவே வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஸ்ரீரங்கத்திற்கு வரும் மேற்கண்ட வாகனங்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY