வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு…. முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

247

தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையை நிகழ்த்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் இந்தியை திணிக்கக் கூடாது. இரு மொழிக் கொள்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்தியை திணிக்கும் முயற்சிகளை முறிடிக்க தீவிரமாக உள்ளோம். பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை பிரிக்கப்பட்டு தனி மாவட்டங்களாக மாற்றப்படும். நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.15,000 லிருந்து ரூ.16,000 ஆக உயர்த்தப்படும். சுதந்திர போராட்ட ஓய்வூதியதாரர்களின் வாரிசுகளுக்கான உதவித்தொகை ரூ.7500 லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தப்படும் என்றார்.

LEAVE A REPLY