வர்மா பட விவகாரம்…என்ன நடந்தது பாலா விளக்கம்

91

தெலுங்கில் வெற்றி பெற்ற திரைப்படம் ‘அர்ஜூன் ரெட்டி’. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இ4 எண்டெர்டெயின்மெண்ட் சார்பில், இயக்குநர் பாலா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ‘வர்மா’ எனப் பெயரிடப்பட்ட அந்தப் படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்தார். ’ரீமேக்

Bala Statement - Varma Issues

படங்களை இயக்க விரும்பாத பாலா, துருவ்வுக்காக அர்ஜூன் ரெட்டியை ரீமேக் செய்ய ஒப்புக் கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது’ என வர்மா படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம்  தெரிவித்தார்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து, காதலர் தினத்தை முன்னிட்டு வரும் 14-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், படத்தை  கைவிடுவதாக  தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. மீண்டும் துருவ் ஹீரோவாக நடிக்க, வேறொரு இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்து  படம் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து பாலா வெளியிட்டுள்ள அறிக்கை: அதில், ‘படைப்பு சுதந்திரத்தை கருதி, வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்தே முடிவு. கடந்த ஜனவரி 22-ம் தேதியே இதற்காக தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் போட்டு விட்டேன். துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் எதுவும் பேச விரும்பவில்லை’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY