அமமுகவுக்கு ஓட்டுபோடுங்க! சு.சாமி டுவீட்

149
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: விஷ்வ ஹிந்து சபையுடன் ஆலோசனை செய்த பின்னர், தமிழகத்திலுள்ள தேசியவாதிகள் தினகரனின் அமமுக கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஊழலைப் பொறுத்தவரை தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரிதான். ஆனால், தினகரனைச் சேர்ந்தவர்கள் தேசிய ஒற்றுமைக்கான நல்லவர்கள்’ என்று தெரிவித்துள்ளார். சுப்பிரமணியம் சுவாமியின் இந்த டுவீட்டால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

தினகரன் தனது ஒவ்வொரு தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன்சுவாமி தினகரனுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா சிறைக்கு செல்லும் முன் அவர் தான் முதல்வராக வேண்டும் என்று சுப்பிரமணியம் சுவாமி கூறியது குறிப்பிடத்தக்கது


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY