கர்நாடகாவில்  கொட்டித் தீர்த்த மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. அங்கிருந்து 3 லட்சம் கனஅடிவரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து தற்போது அங்கிருந்து 10,000 கனஅடிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் நேற்று காலை கரூர் மாவட்டம் மாயனூருக்கு வந்து சேர்ந்தது. மாயனூருக்கு இன்று காலை 3,500 அடி தண்ணீர் வந்தது. அது அப்படியே காவிரியில் திறக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு இந்த தண்ணீர் கல்லணைக்கு வந்து சேர்ந்தது.

இதையடுத்து இன்று காலை கல்லணையிலிருந்து டெல்டா  பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர், மற்றும் 5 மாவட்ட கலெக்டர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகியவற்றில் தலா 1000 கன அடியும், கொள்ளிடத்தில் 500 கனஅடியும் திறக்கப்பட்டது. நீர்வரத்திற்கேற்ப பின்னர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY