பாகற்காய் பழுத்துப் போவதை தடுக்கும் வழி

63

பாகற்காய் வாங்கிய உடனே வட்டமாக நறுக்கி டைட்டான பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் பழுக்காது.

நீண்ட நேரம் கரண்ட் கட்டாகும் போது பிரிட்ஜ்ஜில் இருக்கும் பாலை காலியான அறையில் வைத்தால் கெட்டுப் போகாது.

உப்புமா செய்யும் ரவையை வாணலியில் வறுத்து வைத்தால் பூச்சி வண்டுகள் வராது. மாவுப் பொருட்களை குளிர் காலங்களில் புழு, பூச்சி வராமல் இருக்க பிரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும்.

வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் சூடு தணியும்.

கொத்தமல்லி, கருவேப்பிலை, வெந்தயகீரை வகைகளை உடனே ஆய்ந்து காற்று வெளிச்சத்தில் பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைத்தால் 1 வாரம் ஆனாலும் கெடாது.

LEAVE A REPLY