திருச்சி நாடாளுமன்ற மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆனந்த ராஜாவை ஆதரித்து கமலஹாசன் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் திருச்சியில் எனக்கு என்று அண்ணன் சந்திரஹாசன் இருந்தார். அவர் இல்லாமல் நான் வந்திருப்பது 3வது முறை. இப்போது எனக்கு ஏராளமான உறவுகள் உள்ளனர். திருச்சியில் உள்ள குடிநீர் பிரச்சசினையை தீர்க்கவேண்டும்.  அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். மக்களின் நலனை பார்க்க வேண்டிய அரசு டாஸ்மாக் கடைகளை கையில் எடுத்துக் கொண்டு, பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைத்துள்ளது. தண்ணீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க முடியாத அரசுகள் இங்கு ஆட்சியில் இருக்கிறது. இது நாடாளுமன்ற தேர்தல் தானே இதில் மக்கள் நீதி மய்யம் என்ன செய்ய போகிறது என நினைக்க வேண்டாம். திருச்சிக்கான பிரதிநிதியை டெல்லிக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் என எண்ணி வாக்களியுங்கள். பாலம் கட்டுகிறேன் என்று சொன்ன பாலங்களையே கட்டவில்லை. உடைந்த பாலங்களையா சரி செய்ய போகிறார்கள்? மக்களுக்கான திட்டங்களை செய்யாத அரசுகளை அகற்ற வேண்டும். அரசியலுக்கு நாங்கள் சம்பாதிக்க வரவில்லை. இது சம்பாதிக்கும் இடம் இல்லை. நல்ல செயல்களை மக்களுக்காக செய்ய வேண்டிய இடம். காவல் துறையை ஏவல் துறையாக மாற்றியுள்ள நிலைமையை மாற்றி நம்மை பாதுகாக்கும் காவல்துறையினரை நாம்தான் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கமல் பேசினார். 

LEAVE A REPLY