காணாமல் போனவர்கள் எங்கே? கோத்தபய பதில் தர எம்பி கோரிக்கை!

100

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின்  ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபய ராஜபக்சே அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தமிழ் எம்பி ஸ்ரீநேசன் தெரிவித்ததாவது; தென் இலங்கையிலிருந்து வரும் தலைவர்கள் அடிப்படைவாத சிந்தனையில் மூழ்கியுள்ளனர். அவர்கள் பேரினவாதத்தை மட்டும் வைத்து ஆட்சி செய்பவர்கள்.

அப்படியின்றி முற்போக்கு சிந்தனையுடன் சிறுபான்மை மக்களும் இலங்கையில் வாழ்கின்றனர். அவர்களின் தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இதனால்தான் அறவழி, ஆயுத போராட்டங்கள் நடைபெற்றன. 

இன்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்னும் தெருவில் கண்ணீருடன் நிற்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் கூறும் பொறுப்பு கோத்தபயவுக்கு உண்டு. பல்வேறு இன மக்களை நிர்வகிப்பதற்கான தகுதி அவரிடம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் தேர்தலில் வெற்றியடைவோம் என்று கொக்கரிப்போரை பார்க்கும் போது சிறுபான்மையினர் வெட்கமடைகின்றனர் என்றார்.

LEAVE A REPLY