திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள கரும்புளிப்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளப்பொண்ணு (55). இவரது மருமகள் மீனா (27). இருவரும் நேற்று மாலை வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு 2 மர்மநபர்கள் வந்து ஜோதிடம் பார்ப்பதாக கூறினர். இதற்கு வெள்ளப்பொண்ணு, மீனாவும் சம்மதித்து 2 பேரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.

ஜோதிடம் பார்ப்பதாக கூறிய அவர்கள் மாமியார், மருமகள் இருவரும் அணிந்திருந்த தோடு, மூக்குத்திகளை கழற்றி வைக்க சொல்லியிருக்கின்றனர். இதனால் இருவரும் 4 பவுன் மதிப்பு கொண்ட தோடு, மூக்குத்திகளையும், மீனா தாலிச் செயினையும் கழற்றி வைத்தனர். இதையடுத்து அவர்கள் இருவரிடமும் குறிப்பிட்ட அளவு அரிசியை தந்து அதை தனித் தனியாக ஒரு அறைக்குள் சென்று எண்ணுமாறு அந்த ஆசாமிகள்  கூறினர்.

இதை நம்பிய மாமியாரும் – மருமகளும் நகையை கொடுத்து விட்டு தனியாக சென்று அரிசியை எண்ணினர். பின்னர் வந்து பார்த்த போது அந்த ஆசாமிகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மணப்பாறை போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் வழக்கு பதிந்து ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY