சென்னை ஐகோர்ட் சமீபத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இதை கடைப்பிடிக்காதவர்களின் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால் இதெல்லாம் ஆக்கப்பூர்வமானதாக தெரியவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இந்த நடவடிக்கைக்கு பதிலாக ஹெல்மெட் இல்லாத வாகன ஓட்டிகளிடம், உரிய விலையை வாங்கிக் கொண்டு ஒரு நல்ல தரமான ஹெல்மெட்டை அவர்களிடம் கொடுத்து, அணிய வைக்கலாம். இதனால் மறுமுறை அவர், நிச்சயம் தலைக் கவசம் இல்லாமல் வரமாட்டார். அப்படியே வந்தாலும், மறுபடியும் மீண்டும் உரிய பணத்தை  வாங்கி 2வதாகவும் ஹெல்மெட்டை கொடுக்கலாம்.

இதனால் 3வது முறை அவர் ஹெல்மெட் இன்றி வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படியே எத்தனை தடவை தலைக்கவசம் இன்றி வந்தாலும்,  அத்தனை தடவையும், உரிய பணத்தை வாங்கிக் கொண்டு ஹெல்மெட் கொடுக்கலாமே?. எத்தனை ஹெல்மெட் தான் வாங்குவார்கள்?

இதேபோன்ற விதிகளை வாகன இன்சூரன்ஸ் விஷயத்திலும் கடைப்பிடிக்கலாம். இன்ஸ்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு உரிய பணத்தை வாங்கி அங்கேயே இன்சூரன்ஸ் போட்டு கொடுக்கலாம். இதனால் அவர் மறுமுறை அவர் இன்சூரன்ஸ்சுடன் வருவதையும் உறுதி செய்யலாம்.

அதே போல் ஓட்டுநரின் உரிமம் இல்லாமல் வந்தால், LLR போட்டு கொடுக்கலாம். இதனால் ஒரே ஆண்டில் அனைத்து வாகன ஓட்டிகளிடமும் அனைத்து ஆவணங்களும் இருக்கும்.  ஐகோர்ட்டின் உத்தரவையும், இதன்மூலம் எளிதில் நிறைவேற்றலாம். தமிழக அரசு இது குறித்து பரிசீலிக்கலாமே!


Warning: A non-numeric value encountered in /cloudsin/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY