காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடந்த 13 ஆம் தேதி தமிழ்நாட்டில் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடல்  நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். 
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது அரசியல் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியின் கலந்துரையாடல்  நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது ஏன்? என ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிர்வாகத்துக்கு கல்லூரி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY