குமாரசாமி ராஜினாமா?

202

கர்நாடகாவில் ஆளும் மஜக- காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா செய்ததையடுத்து அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இந்த பிரச்னையில் உச்சநீதி மன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. கடந்த வாரம் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளியன்று சபை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது திங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று சபை தொடங்கியது முதல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜகவினர் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். ஆனால் இன்னும் எம்எல்ஏக்கள் விவாதத்தில் பேச வேண்டியதிருக்கிறது என்று ஆளும் தரப்பினர் தெரிவித்தனர். முதல்வர் குமாரசாமி இன்னும் 2 நாள் அவகாசம் கேட்டார். இதற்கு சபாநாயகர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் மாலை 6.15 மணியளவில் பேசிய சபாநாயகர் இன்று வாக்கெடுப்பு நடத்துவதாக சொல்லியிருக்கிறேன். எனவே எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரும் 5 நிமிடத்தில் பேசி முடிக்க வேண்டும். 8 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்றார். இதற்கு காங்கிரஸ், மஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்னும் 17 எம்எல்ஏக்கள் பேச வேண்டியதிருக்கிறது என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையை 10 நிமிடம் சபாநாயகர் ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு முதல்வர் குமாரசாமி கவர்னரை சந்திக்கவுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. அப்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது. 


Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY