தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி உள்ளிட்ட 4  தொகுதி இடைத் தேர்தல்கள் வாக்குபதிவு அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி, அதிமுக சார்பில் செந்தில்நாதன், அமமுக சார்பில் சாகுல் அமீது ஆகியோர் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி பிரச்சாரத்தை துவக்கி விட்ட நிலையில் அதிமுக மற்றும் அமமுக ஆகியவை இப்போது தான் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகின்றன.

இதில் வேடிக்கை என்னவென்றால் அதிமுக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று கரூர் டவுனில் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான விஜயபாஸ்கர் தலைமையில் நடத்தப்பட்டதுதான். காரணம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் செந்தில்நாதன் கடந்த 2011ம் ஆண்டு அரவக்குறிச்சி தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமியிடம் தோற்றவர் என்பதுதான். மேலும் இன்று முக்கிய விஐபிகள் சந்திப்பு, பிரச்சாரத்திற்கு முன்னதான வழிபாடு ஆகியவற்றுக்கு அமைச்சர் விஜயபாஸ்கரும், வேட்பாளரும் சென்று வந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்ச்சிகளில் கரூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் தம்பிதுரை கலந்து கொள்ளவில்லை. இது குறித்து விஜயபாஸ்கரிடம் கேட்டதற்கு அவரும் சரிவர பதில் அளிக்கவில்லை. தேர்தல் முடிவு தனக்கு சாதகமாக இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் தம்பிதுரை வரவில்லை என்றும்  இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவாரா? என்பது குறித்து கேட்டதற்கு யாரும் பதில் அளிக்கவில்லை. 

LEAVE A REPLY