12-வது 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30 முதல் ஜூலை 14ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாட்டு அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டது.
 அணி விவரம்: ஆரோன் பின்ச் (கேப்டன்), ஜேசன் பெஹ்ரெண்டாப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), நாதன் கோல்டர்-நைல், பேட் கம்மின்ஸ், உஸ்மான் கவாஜா, நாதன் லயான், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜி ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிச்செல் ஸ்டார்க், மார்க்ஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் சம்பா. பந்தை சேதப்படுத்தியதாக ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருந்த ஸ்மித் மற்றும் வார்னர் அணியில் இடம் பெற்றனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட்க்கு இடமில்லை. இந்திய அணியும் இன்று அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Warning: A non-numeric value encountered in /home/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY