ஐஆர்சிடிசியில் இனி மாதம் 12 டிக்கெட் புக் செய்யலாம்!

196

ரயில்வேயின் ஐஆர்சிடிசி தளத்தில் மட்டும்  தினமும் லட்சக்கணக்காணோர் டிக்கெட்கள் புக் செய்து வருகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி. தற்போது, ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் வசதிகளை மேம்படுத்தியுள்ளது. ஒருவர் ஒரு மாதத்தில் ஒரு ஐ.டியில் இருந்து 6 முறை டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம் என்று இருந்தது. அது தற்போது 12 முறை  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு ஆதார் எண்ணை, ஐஆர்சிடிசியுடன் இணைக்க வேண்டும்.இதை இணைக்கும்போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் உங்களின் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் அனுப்பப்படும். அதை அப்டேட் செய்தால் ஆதார் எண் ஐ.ஆர்.சி.டி.சியுடன் இணைக்கப்பட்டு விடும்.

மாஸ்டர் லிஸ்ட் படி, நம்முடன் பயணிக்க இருப்பவர்களின் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். இந்த இரண்டையும் இணைக்கும் பட்சத்தில் நீங்கள் மாதம் ஒன்றிற்கு 12 டிக்கெட்கள் புக் செய்து கொள்ளலாம். பயணிகளின் விபரங்களை பூர்த்தி செய்ய 25 நொடிகள் தான் தரப்படுகிறது. அதே போல், கேப்ச்சா கோடை பதிவு செய்யவும் 5 நொடிகள் தான் தரப்பட்டுள்ளது. ஸ்லீப்பர் க்ளாசில் புக் செய்ய விரும்புபவர்கள் 11 மணியில் இருந்து புக் செய்யலாம்.

LEAVE A REPLY