வேலுமணி… அடுத்தது ஆரம்பித்தது திமுக

354
Spread the love

அமைச்சர் எஸ்பி வேலுமணி தனது பினாமி நிறுவனங்கள் மூலம் பலகோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளதாகவும், அவர்மீது வழக்கு பதியகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்பி, ஆர்.எஸ்.பாரதி மனுதாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணி தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்துள்ளதாகவும், தகுதியற்ற நிறுவனங்களுக்கு சென்னை, கோவை, திருப்பூர். திருச்சி, சேலம் மாநகராட்சிகளில் நடைபெறும் பணிகளுக்கு டெண்டர்கள் வழங்கியிருக்கிறார். இந்த நிறுவனங்களில் இவரது உறவினர்கள் மற்றும் பினாமிகள் இயக்குனர்களாக உள்ளனர். மேலும் இந்த நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்வரை பல லட்சம் மட்டுமே வரவு செலவு காட்டிய நிலையில் தற்போது கோடிக்கணக்கில் வரவு செலவு காட்டியிருக்கின்றன. இவற்றுக்கு அமைச்சர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி முறையற்ற வகையில் சலுகை காட்டியிருக்கிறார். இதன் மூலம் பலகோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.இது குறித்து லஞ்ச ஒழிப்புதுறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த புகார் குறித்து வழக்கு பதிய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். இதில் கோவை மாநகராட்சியில் மட்டும் நடந்த ஊழல் குறித்து 4 ஆயிரம் பக்கம் கொண்ட ஆவணங்களை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிய கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY