அமைச்சரை பற்றி அவதூறு பரப்பினாராம் கரூரில் நிருபர் கைது !

508
Spread the love

தினமலர்.காம் மற்றும் லோட்டஸ் டிவி, மதிமுகம் டிவியின் கரூர் செய்தியாளர் ஆனந்தகுமார் (42) இவர் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி வெளியிட்டதாக கூறி இன்று கரூர் நகர போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து விரைவு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சேர்க்க அனுமதிக்க கோரி நிருபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து நீதிபதி அவரை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். நிருபர் மீது 702/2018 வழக்கு பிரிவு 294B 203 504/2 506/1 Sec 67 IT Act பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY