உச்ச நீதிமன்ற 46வது நீதிபதியானார் ரஞ்சன் கோகாய்

336
Spread the love

உச்சநீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்கிறார் ரஞ்சன் கோகாய்!
உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நேற்றுடன் ஓய்வு பெற்றார். அவர் தனது பதவியில் முக்கிய வழக்குகளான ஓரின சேர்க்கை, ஆதார், கள்ளக்காதல், சபரிமலைக்கு பெண்கள் அனுமதி உள்ளிட்ட “வரலாற்று” சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கினார். இந்நிலையில் தீபக் மிஸ்ராவின் பரிந்துரையின் பேரில் உச்சநீதிமன்றத்தின் 46-ஆவது நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்கிறார். அவர் கடந்த 1978-ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் பதிவு குவாஹாட்டி உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார்.பின்னர் நிரந்தர நீதிபதியாக கடந்த 2001-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் கடந்த 2010-ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அதன் தலைமை நீதிபதியாக கடந்த 2011-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் இன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார். உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரிசெய்ய தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வெளிப்படையாக குற்றம்சாட்டிய நீதிபதிகளில் கோகாயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது,

LEAVE A REPLY