லூபன் புயல்: கேரளாவுக்கு ஆபத்து

599
Spread the love

கேரள மாநிலத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இது குறித்து ஞாயிறு (30ம் தேதி) காலை வெளியாகியுள்ள வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வங்கக் கடலில் இலங்கையின் தென்கிழக்கு முனை மேலே மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இதையடுத்து லட்சத்தீவு மாலத்தீவு இடையே காற்று சுழற்சி உருவாகியுள்ளது. லட்சத்தீவு சுழற்சி தீவிரம் அடைந்து “LUBAN “லுபன் புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புயல் 175 கி.மீ வேகத்திற்கு தீவிரமடைந்து ஓமன் (மஸ்கட்) நோக்கி நகர 60% வாய்ப்பும், ஈரான் நோக்கி நகர 20% வாய்ப்பும், பாகிஸ்தான் நோக்கி நகர 10%வாய்ப்பும் உள்ளது. இந்திய மேற்கு கரைக்கு இணையாக கேரளா, கர்நாடகா, கோவா, மஹாராஷ்ரா கடற்கரை ஒட்டிச் சென்று குஜராத் கரையை தாக்க 10% வாய்ப்பும் உள்ளது. ஓரிரு தினங்களில் தாக்கும் இடம் உறுதியாக தெரியும். எது எப்படியோ LUBAN புயல் கிழக்கு காற்றை ஈர்க்கும், இந்த கிழக்கு காற்றை இலங்கை தமிழகம் இடையே தாழ்வு நிலை மற்றும் சுழற்சி நிலைபெற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு குறைவாக மழையையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு சற்று கூடுதல் மழையையும், பிற மாவட்டங்களுக்கு கன மழையையும்,தென் மாவட்டங்களுக்கும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கன, மிக கன மழையையும் கொடுக்கும். குஜராத் வாய்ப்பு சதவீதம் அதிகரித்தால் கேரளாவில் மீண்டும் ஒரு வெள்ளப்பெருக்கு வாய்ப்பு ஏற்படும்.

LEAVE A REPLY