என் நாக்கை அறுக்க முடியுமா? பொன்.ராதாகிருஷ்ணன் கொதிப்பு

309
Spread the love

தஞ்சையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் துரைக்கண்ணு சமீபகாலமாக யார் யாரோ அதிமுகவை விமர்சனம் செய்கின்றனர். தொண்டர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிமேல் அதிமுகவை விமர்சனம் செய்யும் நபர்களின் நாக்கை அறுங்கள் என்று அதிரடியாக பேசினார். அமைச்சரின் இந்த விமர்சனம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாகர்கோவிலில் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்புடன் பேசாமல் தமிழக அமைச்சர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து மாண்பை காப்பாற்ற வேண்டும். நானும் அதிமுக அரசை விமர்சனம் செய்கிறேன். அதற்காக என்னுடைய நாக்கை அறுப்பார்களா? இதற்கு சம்மந்தப்பட்டவர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று கோபத்துடன் கூறினார்.

LEAVE A REPLY