Spread the love

தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்துறை அமைச்சர் உதயகுமார், மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவலை மத்திய செலவினங்களுக்கான நிதிக்குழு தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய செலவினங்களுக்கான நிதிக்குழுவுக்கு மனு அளித்திருந்தார். அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு, கட்டட கான்ட்ராக்டர் யார்? என்பது உள்ளிட்ட 8 கேள்விகளை கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய செலவினங்களுக்கான நிதிக்குழு, மதுரை மாவட்டம் தோப்பூரில் எம்ய்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் டெண்டர் எதுவும் விடப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY