ஓபிஎஸ் வாழ்க்கையில் விளையாடிய சிசிடிவி….

504
Spread the love

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு தொலைகாட்சி விவாதத்தில் பேசிய அமமுகவை சேர்ந்த தங்கத்தமிழ் செல்வன் எங்கள் துணை பொதுச் செயலாளரை சந்திக்க வேண்டும் என ஓபிஎஸ் முயற்சி செய்கிறார். 10 நாட்களுககு முன்பு கூட அந்த முயற்சியை ஓபிஎஸ் மேற்கொண்டார் என்றார். அதற்கு என்ன ஆதாரம் என நெறியாளர் கேட்க கடந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி டிடிவியை ஓபிஎஸ் சந்தித்தார். அதனை அவர் மறுக்கமுடியுமா? என கேட்டார். பரபரப்பான இந்த குற்றச்சாட்டிற்கு அதிமுகவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நேற்று காலை சென்னையில் நிருபர்களிடம் பேசிய டிடிவி தினகரன் தங்கதமிழ்ச்செல்வன் சொன்னது உண்மை தான். கடந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி எனக்கும் ஓபிஎஸ்க்கும் நெருங்கிய நண்பரின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. என்றும் தேவைப்பட்டால் ஆதாரங்களுடன் நிரூபிப்போம் என்று ஒரு போடு போட தீ பரவ ஆரம்பித்தது. அதிமுக முண்ணனி தலைவர்கள் சந்திப்பே நடக்கவில்லை என கூறி வந்த நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் தினகரனை சந்தித்தது உண்மை தான். நானாக போகவில்லை அவர் தான் வற்புறுத்தி அழைத்தார் என கூறி சமாளித்தார்.

சந்திப்பே நடக்கவில்லை என்று கூறி ஓபிஎஸ் சமாளிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தநிலையில் அவர் சரண்டர் ஆனதால் அதிமுகவில் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு காரணம் சிசிடிவி என்கிற விபரம் தற்போது வெளியாகியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தான் டிடிவி- ஓபிஎஸ் சந்திப்பு நடந்துள்ளது.சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள அந்த வீடு நூற்றுக்கணக்கான ஏக்கரில் அமைந்துள்ளதாக தெரிகிறது. வீ்ட்டின் முன்பக்க கதவில் தொடங்கி தோட்டத்தை தாண்டி வீட்டிற்கு செல்லும் வழி முழுவதிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் காரில் இருந்து இறங்கி வீட்டிற்கு செல்வது வரை கேமராக்கள் இருக்கின்றன. அன்றைய தினம் மதிய வேளையில் முன்னதாகவே வேறு ஒரு நண்பரின் காரில் வந்த ஓபிஎஸ் சுமார் 45 நிமிடங்கள் காத்திருந்த பிறகே டிடிவி தனது வழக்கமான காரிலேயே அந்த பண்ணை வீ்ட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது டிடிவி வீட்டிற்கு வந்த விபரம் தெரிந்த ஓபிஎஸ், டிடிவியின் கார் நிற்கும் இடத்திற்கு சென்றே அவரை வரவேற்றுள்ளார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு டிடிவி முதலில் கிளம்ப மீண்டும் கார் வரை சென்று ஓபிஎஸ் வழியனுப்பியிருக்கிறார். இந்த
காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியிருக்கும் தகவல் ஓபிஎஸ்சுக்கு தெரிந்துள்ளது. இது பற்றி சம்மந்தப்பட்ட நண்பரிடம் பேச அந்த நபர் நடந்ததை என்னால் மறுக்க முடியாது என கறாராக பேசிவிட்டதால் தான் ஓபிஎஸ் சரண்டர் ஆனதாக கூறுகின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.

LEAVE A REPLY