கட்டிடங்களை விட்டுக் கொடுக்க தயாராகும் சாஸ்த்ரா

336
Spread the love

தஞ்சை மாவட்டம், வல்லத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தமிழக அரசின் சிறைத் துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டியுள்ளதாக பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆக்கிரமிப்பு செய்த இடத்தை சாஸ்த்ரா நிர்வாகம் உடனடியாக திருப்பித் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சாஸ்த்ரா நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் சிறைத் துறைக்கு சொந்தமான இடத்தை காலி செய்து கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் கடந்த மாதம் தஞ்சை கலெக்டர் அலுவலகம் சாஸ்த்ரா பல்கலை. நிர்வாகத்துக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அக்டோபர் 3ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லையெனில் வேறு விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தது. மாவட்ட நிர்வாகம் கொடுத்த காலகெடு முடிந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் 32 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறை கட்டிடங்கள், 1 கேண்டீன், விளையாட்டு மைதானம், மீட்டிங் கால் கட்டிடம் ஆகியவற்றை 2 நாட்களில் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க சாஸ்த்ரா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள பெண்களை விடுதியை கல்வியாண்டு இறுதியான மார்ச், அல்லது ஏப்ரல் மாதம் அரசிடம் ஒப்படைக்க சாஸ்த்ரா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY