கணவரை மயக்கும் சாம்பார் சுவை

317
Spread the love
சாம்பாரில் முள்ளங்கியை அப்படியே போடாமல் சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி போட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
 
சிறிதளவு பொரிகடலை, புழுங்கல் அரிசி இரண்டையும் வறுத்துப் பொடித்து, சாம்பார் பொடியுடன் சேர்த்தால், சாம்பார் சூப்பராக இருக்கும்.
 
வெந்தயக் குழம்புக்கு வெந்தயத்தைத் தாளிக்காமல், வெறும் வாணலியில் நன்றாக வறுத்துப் பொடி செய்து தூவினால், குழம்பு மணமாக இருக்கும்.
 
வெங்காய சாம்பார் செய்யும்போது, பெரிய வெங்காயம் வைத்துச் செய்யவும். சின்ன வெங்காயம் 7-8 வதக்கி சாம்பாருக்கு அரைக்கும் பொருட்களுடன் அரைத்து சாம்பாரில் கொட்டவும். மணம் வீட்டைத் தூக்கும். அப்புறம் என்ன சாம்பாரை சாப்பிட்ட கணவர் நீ எனக்கு கிடைத்த வரம் என்று ஐஸ் வைப்பதை நீங்கள் ரசிக்கலாம்.
 

LEAVE A REPLY