கருணாஸ் பதவிக்கு ஆபத்து

366
Spread the love

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசை தொடர்ந்து விமர்சிக்கும் கருணாஸ் உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப எடப்பாடி தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்குலத்தோர் புலிப்படை கூட்டத்தில் தமிழக அரசையும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்த எம்எல்ஏ கருணாஸ் கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டார். 3 நாட்களுக்கு பின்னர் ஜாமீனில் வெளியே வந்த கருணாஸ் மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், தமிழக அரசையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். கருணாஸ் விவகாரம் அதிமுகவிற்கு தலைவலியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் தனபால், சட்ட அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்டோர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசித்தனர். அப்போது கருணாஸ் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் கட்சி விரோத நடவடி்கையில் ஈடுபடுவதாகவும் அதற்காக நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கொறடா மூலம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன்படி கருணாஸ் மட்டுமல்லாது தற்போது தினகரனுக்கு ஆதரவாக உள்ள விருதாச்சலம் எல்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY