தடை யாரால்? ‘கள்’சாமி புது குண்டு

291
Spread the love

கள்ளுக்கு தடை விதித்தது எம்ஜிஆர் தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதி என்று நல்லசாமி குற்றம் சாட்டினார். இது குறித்து திருச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறியதாவது….. சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு நாளை கள் படையல் நடத்த உள்ளோம். இதனை சரியாக புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பு ஏற்படும் என்பதை அறிந்து, அதற்காக காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டுள்ளோம். எம்ஜிஆர் கள்ளை தடை செய்தது தமிழ்நாட்டுக்கு இழைத்திட்ட அநீதி. காவிரி தீர்ப்பால் எந்தவித பலனும் இல்லை. மாறாக கேடுதான் விளைந்துள்ளது. தினந்தோறும் நீர்ப் பங்கீடு என்பதே சரியான தீர்வாக இருக்கும் எனவே தமிழக அரசு உடனடியாக சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

LEAVE A REPLY