காவிரினாலே வேதனை தானே.. கேஎம்சி டாக்டரை கலாய்த்த கலைஞர்

247

“He was a fighter எங்களைவிட அதிகமாகப் போராடியவர் அவர்தான்” என்று கூறி, தங்களிடம் சிகிச்சை பெற்ற கலைஞர் கருணாநிதியை புகழ்கின்றனர். கலைஞருக்கு புகழ் அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தி … அவர் தங்களிடம் எவ்வாறு நகைச்சுவையுடன் பேசியவற்றை நினைவு கூறினர்.

கலைஞருடன் பல ஆண்டு காலமாக நண்பராக இருந்த அவரது குடும்ப மருத்துவர் கோபால், கலைஞர் குறித்த ஒரு புத்தகமே எழுதப்போவதாகவும், அவற்றில் எல்லாவற்றையும் குறிப்பிட போவதாக கூறி முடித்துக் கொண்டார்.
கேஎம்சியின் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ்: “கலைஞருக்கு டெஸ்ட்டுக்காக தொடை பகுதியிலிருந்து ரத்தம் எடுக்க வேண்டியிருந்தது. அதனால டாக்டர்கள் வேல்முருகன், முரளி மகேஷ்னு இரண்டு பேரை காவேரி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்புறோம். ரத்தம் எடுக்குறப்ப கொஞ்சம் சிரமமாவும் வலியாவும் இருக்கும்னு கலைஞர்கிட்டே சொன்னேன். உடனே அவர், காவேரின்னாலே வலியும் வேதனையும் இருக்கத்தான் செய்யும்னு சொன்னாரு.” மறக்க முடியாத வார்த்தைகள் என்றார்.

டாக்டர் மோகன் காமேஸ்வரன், “தூதுவளை இலையை கொஞ்சம் அதிகமா சாப்பிட்டதால அவருக்குத் தொண்டையிலே புண் வந்திடிச்சி. அது பற்றி விசாரிச்சேன். அதற்கு அவர், நாலு இலைதான் சாப்பிட்டேன். இந்தப் பாடு படுத்துது. இரண்டு இலையே படாதபாடு படுத்தும்போது, நாலு இலை படுத்தாதான்னு கேட்டாரு பாருங்க.

கதிரியல் நிபுணர் டாக்டர் இமானுவேல்: ஸ்கேன் எடுக்கும்போது அவர்கிட்ட நான், மூச்சை இழுத்துப் பிடிச்சிக்கணும். நாங்க சொல்லும்போது மூச்சை விட்டுடுங்கனு சொன்னேன். அதற்கு கலைஞர், மூச்சை விட்டுடக்கூடாதுன்னு தானே நான் டாக்டர்கள்கிட்ட வந்திருக்கேன். நீங்க மூச்சை விடச் சொல்றீங்களே என்றார். பேஷண்ட்கிட்ட வேற வார்த்தையில இதைச் சொல்லுங்கன்னாரு அட்வைஸ் பண்ணாரு. இன்னைக்கு வரைக்கும் வேற வார்த்தை எனக்கு கிடைக்கல என்று ஆதங்கமா குறிப்பிட்டார்.

பல் மற்றும் முகசீரமைப்பு டாக்டர் பாலாஜி: பல் சீரமைக்கும்போது வாயில ஒரு இன்ஜெக் ஷன் போடுவோம். அப்ப வலி தெரியாம இருக்கணும்ங்கிறதுக்காக, அய்யா.. நாக்கை கொஞ்சம் லூசா விடுங்கன்னு சொன்னேன். அதுக்கு கலைஞர், நாக்கை லூசா விட்டா, என்னை லூசுன்னு சொல்லிடுவாங்கய்யான்னாரு.
இப்படி கலைஞருடனான அனுபவங்களை பகிர்ந்தனர் டாக்டர்கள்.

LEAVE A REPLY