கேரள வெள்ள பாதிப்புக்காக சிவகங்கை காவல்துறை காட்டிய கரிசனம்

292

கேரள மழை பாதிப்புகளுக்காக ஒரு நாள் சம்பளத்தை பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது சிவகங்கை மாவட்ட காவல்துறை. மதுரை சரகத்திற்குட்பட்ட சிவகங்கை மாவட்ட காவல்துறையில் டிஎஸ்பிக்கள் ஆரம்பித்து காவலர்கள் வரை சுமார் 5 ஆயிரம் பேர் உள்ளனர். இந்த மாதம் சிவங்கை மாவட்ட காவல்துறையினருக்கு சம்பளம் குறைவாக இருந்தது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் கணக்கிட்டுகொண்டு இந்தபிடித்தமோ? அதைப்பிடித்து இருப்பார்களோ? எண்ணிக்கொண்டிருந்த நிலையில் கிட்டதட்ட மாத இறுதி வந்த நிலையில் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் அனைவருக்கும் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்திருப்பது தெரியவந்தது. காரணம் கேட்டதற்கு கேரள மாநில வெள்ளத்திற்கு நிவாரணமாக ஒரு நாள் சம்பளம் பிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட தகவலால் அதிர்ச்சியாகி இருக்கின்றனர் காவலர்கள். யார் உத்தரவில் பிடித்தார்கள் என்று கேட்டால் அதிகாரிகள் அனைவரும் கப்சிப்..

LEAVE A REPLY