சபரிமலை பெண்களுக்கு தனி வரிசை இல்லை

334
Spread the love

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதால் சன்னிதானத்தில் பக்தர்கள் யாரும் தங்கக்கூடாது உள்ளிட்ட புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு தனி வரிசை கிடையாது. நிலக்கல்- பம்பை அருகே பெண்களுக்காக 25 சதவீத பேருந்துகள் இயக்கப்படும். பெண்கள் அனுமதிக்கப்படுவதால் சன்னிதானத்தில் பக்தர்கள் யாரும் தங்க கூடாது.நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்வதற்கேற்ப உடல்வாகு உள்ள பெண்கள் மட்டும் வர வேண்டும்.சபரிமலை செல்லும் பெண்களுக்கு வசதியாக, எரிமேலி மற்றும் நிலக்கல் பகுதிகளில் தனி தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். பம்பை முதல் சன்னிதானம் செல்லும் வழிகளிலும் தனி வண்ணங்களில் பெண்களுக்கு தனியாக கழிவறைகள் அமைக்கப்படும். கேரள முதல்வர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறநிலைய துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY