சீமானை கைது செய்யுங்க! : திருச்சி போலீசுக்கு மனு

375
Spread the love

அவதூறாக பேசும் சீமானை கைது செய்யக்கோரி திருச்சி போலீஸ் கமிஷனரிடம் யாதவ இயக்க தலைவர்கள் மனு அளித்துள்ளனர். இது குறித்து பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ், தமிழ்நாடு புதுச்சேரி யாதவ சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணப்பாளர் திருவேங்கடம் யாதவ்,கோகுல மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.பி.எஸ்.சேகர்,ஜெ .மூர்த்தி,சந்திரவம்ச கூட்டமைப்பு நிர்வாகிகள் செந்தில்,ஹெச். கோபால், ஆறுமுகம், கார்த்திக், ஈஸ்வரன், எம்.பன்னீர், யாதவ ஒருங்கிணைப்பு பேரவை தலைவர் ஆர்.கே.வெங்கடாசலம் யாதவ், மார்க்கெட் குமார், செந்தில்குமார்,ஸ்ரீரங்கம், முருகானந்தம் ஆகியோர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணப்பாளர் சீமான் அடிக்கடி இந்து கடவுள் கண்ணபிரானை அவதூறாக பேசி, பிரச்சினையை உண்டாக்கி வருகிறார்.
கடந்த 26ம் தேதி சங்கரன் கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் யாதவரா,கோனாரா என்று அவதூறாக பேசியிருக்கிறார். அரசியல் ஆதாயத்துக்காக இவ்வாறு பேசும் சீமான் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY