டீசல் விலையை குறைங்க! போராட்டத்தை துவக்கிய மீனவர்கள்

381
Spread the love

டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாகை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம். டீசல் விலை உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதாகக் கூறி நாகை, காரைக்கால், புதுக்கோட்டை, ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான விசைப்படகு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாகையில் 53 கிராமத்து மீனவர்கள் , புதுக்கோட்டையில் 11 கிராமத்து மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 8ம் தேதி ராமநாதபுர மாவட்ட மீனவர்கள் சார்பில் ராமநாதபுரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது

LEAVE A REPLY