தமிழக கோவில்களுக்கு இலங்கையில் சொத்து

338
Spread the love

தமிழக இந்து கோவில்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இலங்கையில் உள்ளது என்றும் அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்து திருத்தொண்டர் சபை நிறுவனர் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பாக கரூரில் அவர் கூறியதாவது: கோவில் சொத்துக்களை விற்பதற்கும் பொருளாதார இழப்பு ஏற்படுத்துவதற்கும் துணை போகும் அறங்காவலர்கள், அர்ச்சகர்களின் மூலாதார சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு குற்ற வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயில் ஆகியவற்றுக்கு இலங்கையில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக கோவில்களுக்கு சொந்தமான சுமார் 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து தொகை வசூலிக்கப்பட்டால் அறநிலை துறை சார்பில் சர்வதேச அளவிலான பல்கலைக்கழகம் தொடங்கலாம். மேலும் மாவட்டம் தோறும் ஆதரவற்றோர் காப்பகம் அமைக்கலாம். இதன் மூலம் ஆதரவற்றவர்கள் பிச்சை எடுக்காமல் தடுக்கலாம். இதற்கு அறநிலையத் துறை சட்டத்தில் இடம் இருக்கிறது என்றார்.

LEAVE A REPLY