திமுகவுக்கு செக்… ஸ்டாலின் உள்ளிட்ட மாஜிக்களுக்கு குறி

425
Spread the love

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜ-கூட்டணி இருக்கிறதோ? இல்லையோ? அதற்குள்ளாக தங்களை பலமாக எதிர்க்கும் அரசியல் கட்சிகளை நசுக்கி வைக்க பாஜ முடிவு செய்திருக்கிறது. தற்போது தமிழகத்தில் பலமிக்க கட்சிகளாக இருப்பது திமுகவும், டிடிவி தினகரனின் அமமுகவும் என்று நம்பும் பாஜ, முதற்கட்டமாக திமுகவை நசுக்க பாஜ முடிவு செய்து விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். காரணம் தென்மாநிலங்களில் காங்கிரசை பலவீனப்படுத்தும் விதமாக திமுகவை அடித்து பார்க்க பாஜ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அசைன்மெண்ட் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் ஒரு பகுதி தான் திடீரென இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா உதவியாக ராஜபக்சே கூறியதும், இதன் அடிப்படையில் திமுக-காங்கிரசுக்கு எதிராக அதிமுக கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதும் என்று கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திமுகவிற்கு அடுத்த நெருக்கடியாக ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீதான கிடப்பில் போடப்பட்ட புகார்கள் மற்றும் வழக்குகளுக்கு உயிர் கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக கடந்த 2001ம் ஆண்டு ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போது கட்டப்பட்ட நேப்பியர் பாலம் மற்றும் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற பல்வேறு பணிகள் தொடர்பாக 2006ம் ஆண்டு அதிமுக ஆட்சி வந்த போது 6 புகார்கள் கொடுக்கப்பட்டு அவை கிடப்பில் போடப்பட்டது. அதேபோல் அந்த கால கட்டத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகிகளான மறைந்த வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, பொன்முடி,எம்ஆர்கே பன்னீர்செல்வம் உள்ளிட்ட 13 மாஜிக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் சில தற்போதும் நடைபெற்று வருகின்றன. சில வழக்குகளில் சம்மந்தப்பட்ட மாஜிக்கள் விடுதலை பெற்று விட்டனர். தற்போது இந்த வழக்குகளை மீண்டும் தூசி தட்டவும், விடுதலை பெற்றிருந்தால் மேல் முறையீடு செய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பாஜ கொடுத்துள்ள அசைண்மெண்ட்டை எடப்பாடி அரசு விரைவில் துவக்கும் என அரசியல் பார்வையாளர்கள்
தெரிவிக்கின்றனர்,

LEAVE A REPLY