திருச்சியில் விபத்து: சென்னையை சோ்ந்த 8 போ் பலி

478
Spread the love

திருச்சி சமயபுரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் 8 பேர் உயிரிழப்பு.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலையில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்துகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் இவர்கள் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துக்கு உள்ளான ஆந்திராவை சேர்ந்த லாரி

LEAVE A REPLY