செல்வாக்கு மிக்க ஒரே நடிகர் ரஜினிகாந்த் விருப்பத்தை சொன்னார் பொன்னார்

316
Spread the love

மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்தான் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திமுக எதிர்ப்பது வேலையற்ற வேலை. இது குறித்து பேச திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அருகதை இல்லை.ஹைட்ரோ கார்பனை எதிர்ப்பவர்களுக்கு முகவரி இல்லை. அனைவராலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவாக முடியாது. மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்தான்.
புறம்போக்கு நிலம் போல நாதியில்லாத நிலையில் தமிழ்நாடு உள்ளது என்கிற சிந்தனையுடன் நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது. நடிகர் விஜய் ஊழல்வாதிகளின் பெயரை குறிப்பிட்டு கூறினால் அவரை மாலை போட்டு வரவேற்பேன். 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பாஜக தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும்.

LEAVE A REPLY