Spread the love

தஞ்சை பெரிய கோவிலில் ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று மதியம் திடீரென தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தனர். திடீரென போலீசார் வந்ததால் பக்தர்களும்,கோயில் ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் பின்னர் அங்கிருந்து சென்றனர். இந்த திடீர் ஆய்வு குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் கூறுகையில்: தஞ்சை பெரிய கோவிலில் உள்ள புராதான சிலைகள் எத்தனை என்பது குறித்தும் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட சிலைகள் மற்றும் தூண்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது என்றார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ரன்வீர் ஷா என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட கற்தூண்களில் இருந்த எழுத்துகள் தஞ்சை பெரிய கோவிலி்ல் இருப்பது போலவே இருந்ததால் அது குறித்தே சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

LEAVE A REPLY