பேசியது கரூர் கலெக்டர்தானா?

98
Spread the love

கரூர் மாவட்டம் தரகம்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் கலெக்டர் அன்பழகனை செல்போனில் தொடர்பு கொண்டு எங்களது பகுதியில் ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருக்கிறது என்று கூறுகிறார். அதற்கு அவர் உங்களது பகுதி பிடிஓவிடம் தகவலை அளித்தீர்களா? என்று கேட்கிறார். அக்கறையிருந்தால் நேரில் சென்று  தகவல் அளியுங்கள் என்றும், கலெக்டர் என்றால் சரவணபவன் ஹோட்டல் சப்ளையர் என்று நினைத்து விட்டீர்களா ? பிளடி, ராஸ்கல் போன வை என்று கூறுவது போன்ற ஆடியோ வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அந்த ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என்றும், தான் யாரிடமும் அவ்வாறு பேசவில்லை என்று கலெக்டர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY