பைபாசில் திருநங்கைகள்.. கவனிக்குமா போலீஸ்..

300

திருச்சி பால்பண்ணை முதல் சமயபுரம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திருநங்கைகள். குறிப்பாக மாலை 6 மணி துவங்கி அதிகாலை 5 மணி வரை மரத்தின் அருகில் அல்லது மறைவில் நின்று கொண்டிருக்கும் திருநங்கைகளால் மிகவும் சங்கடமான சூழ்நிலை ஏற்படுகிறது வெளியூர்களில் இருந்து வரும் நான்கு அல்லது இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஏதோ ஒரு காரணத்திற்காக வாகனங்களை நிறுத்தினால் திருநங்கைகள் வந்து விடுகின்றனர். இவர்களுக்காக சில லாரி டிரைவர்கள் ரோட்டின் ஒரத்தில் லாரிகளை நிறுத்துவதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அரவாணிகளின் செயல்கள் குறித்து மாநகர மற்றும் மாவட்ட ரோந்து போலீசாருக்கு தெரிந்தும் கண்டுகொள்ளாதது ஏன்? என மக்கள் மறுமலர்ச்சி கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.

LEAVE A REPLY